close
Choose your channels

நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கஸ்தூரி தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியமடைந்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி ’ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1991ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சக்கரவர்த்தி, ராசாத்தி வரும் நாள், ராக்காயி கோயில், ஆத்மா, இந்தியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போதும் அவர் தமிழரசன், உன் காதல் இருந்தால் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கஸ்தூரி தனது மனதில் பட்ட சமூக கருத்துக்களை தைரியமாக பதிவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய மகன் மற்றும் ஒரு திரைப்படத்தில் தனக்கு மகனாக நடக்கும் சிறுவன் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள கஸ்தூரி, இதில் யார் என்னுடைய மகன்? யார் திரைப்படத்தில் எனக்கு மகனாக நடிப்பவர் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதற்கான விடையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் பல நெட்டிசன்கள் சரியாக கஸ்தூரியின் மகனை கண்டு பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.