சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது: 'கபாலி' வசனத்துடன் தமிழ் நடிகையின் டுவீட்

தமிழக அரசியலில் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என தமிழ் நடிகை ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பதும் இருப்பினும் அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று காலை சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் பெங்களூரில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது காரில் வெளியேறிய புகைப்படம் வைரலாகி வருகிறது

இந்த காரில் அதிமுக கொடி இருந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்றும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக கொடியுடன் கூடிய காரில் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி, ‘சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ’கபாலி’ படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் டயலாக்கான ‘வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வசனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். கஸ்தூரியின் இந்த டுவீட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

More News

'கர்ணன்' படத்தை அடுத்து 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த 'கர்ணன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இன்று காலை வெளியானது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் எப்போது? கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது

விராத் கோஹ்லியிடம் இருந்து வார்னர் மகள் பெற்ற ஸ்பெஷல் பரிசு: வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியிடம் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் வார்னரின் மகள் பெற்ற ஸ்பெஷல் பரிசு குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

ஓ மை காட்: யுவனை பார்த்து ஆச்சரியப்பட்ட செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்க உள்ளார் என்பதும், அந்த திரைப்படங்கள் 'நானே வருவேன்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' என்பதும் தெரிந்ததே