நடிகை காயடு லோஹர் நடிக்கும் இன்னொரு படம்.. ஹீரோ யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' என்ற ஒரே ஒரு படத்தின் வெற்றியால் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை காயடு லோஹர் ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ள நிலையில், தற்போது இன்னொரு படத்தில் கமிட்டாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காயடு லோஹர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான 'டிராகன்' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. அதனுடன், காயடு லோஹர் நடித்த கேரக்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, தற்போது அவர் அதர்வா நடித்து வரும் 'இதயம் முரளி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், சிம்பு நடிக்க இருக்கும் ’எஸ்டிஆர் 49’ படத்திலும் காயடு லோஹர் நாயகியாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திலும் காயடு லோஹர் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை அருண்குமார் என்பவர் தயாரிக்கிறார். இவர் முன்னதாக 'நந்திவர்மன்' என்ற படத்தை தயாரித்த நிலையில் இவரது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
Every door hides a deeper story 🚪✨
— Arunkumar (@arun_kumaroffl) May 7, 2025
Here it's the Production No 2 announcement from the @AKfilmfactory 🎬🔥
Starring : @gvprakash & @11Lohar
Produced by : @arun_kumaroffl
Directed by : @DirMari_Chinna
First Look releasing on MAY 9TH pic.twitter.com/NOgDhUlJ6O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments