close
Choose your channels

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள், ‘இவ்வளவு அழகாக கீர்த்தி சுரேஷ் பாடுவாரா என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்புகின்றனர்.

விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதன் பிறகு ’ரஜினி முருகன்’ ’தொடரி’, ‘சீமராஜா’ ’சண்டக்கோழி 2’ ‘சாமி 2’ ’அண்ணாத்தை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ‘நடிகையர் திலகம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ’மாமன்னன்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் ‘ரெமோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை பாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், ‘கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக பாடுவாரா? என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.