close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது என்பதும் தெரிந்ததே. வெளிநாட்டில் உள்ளவர்கள் கூட இந்த பாடலுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் இசைக்காக ஆட்டம் போட்டு வருவது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஏற்ற வேற லெவல் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டியின் காட்சிகள் உள்ளன என்பதும் இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.