close
Choose your channels

மஞ்சள் மேகம் ஒரு பெண்ணாக மாறி… நடிகை கீர்த்தி சுரேஷின் மாஸ் புகைப்படங்கள்!

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் "மகாநடி" திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு பெற்றிருந்தார். இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் “அண்ணாத்த“ திரைப்படத்திலும் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள “சாணிகாயிதம்“ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்தப் படங்களில் வரவை அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து “சர்காரு வாரி பாட்டா“, நடிகர் நானியுடன் இணைந்து “தசரா’‘ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

தமிழ், தெலுங்கை தவிர சமீபத்தில் மலையாளப் படங்களிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வபோது புதுப்புது போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற சேலை உடுத்தியிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதே சேலையில் மார்டன் டிரெண்டிங்கையும் புகுத்தியிருக்கிறார். இதில் "பார்ப்பதற்கு மஞ்சள் மேகமே இறங்கி வந்தது போல" இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.