கமல், அஜித் பட நடிகையின் ஆபாச வீடியோ வைரல்.. இன்ஸ்டாவில் அதிர்ச்சி விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன், அஜித், விக்ரம் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகையின் ஆபாச புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அது மார்பிங் செய்த போலி வீடியோ என்றும் அதை பகிர வேண்டாம் என்றும் அந்த நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ அஜித் நடித்த ’வில்லன்’ விக்ரம் நடித்த ’ஜெமினி’ உட்பட பட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட். கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு திரைப்படங்களில் நடிக்காமல் சமூக வலைதளங்களில் மட்டும் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் திடீரென நடிகை கிரணின் ஆபாச வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருவதை எடுத்து இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
என் மரியாதையையும் தனியுரிமையையும் சேதப்படுத்தும் நோக்கில், போலியாக மாற்றப்பட்ட ஒரு வீடியோ பரவுகிறது. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வீடியோவை பகிர்வது, பதிவிறக்கம் செய்வது அல்லது யாருக்கேனும் அனுப்புவது தவறானது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றச் சட்டத்தின்படி குற்றமாகும். அவ்வாறு பகிர்பவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம்.
தயவுசெய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கிரண் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com