எச்சரிக்கையாக இருங்க.. இது மிகப்பெரிய மோசடி.. ரசிகர்களை அலர்ட் செய்த கவர்ச்சி நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் எனது பெயரில் பண மோசடி நடப்பதாகவும் எனவே தனது ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலர்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ’சட்டப்படி குற்றம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா. அவர் ‘நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ’ ’வைகை எக்ஸ்பிரஸ்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கோமல் சர்மா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் நீச்சலுடை உள்பட ஹாட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் கோமல் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் தனது பெயரில் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்கி, ஒரு மொபைல் எண்ணை மர்ம நபர் ஒருவர் பதிவு செய்திருப்பதாகவும், அது போலியான நம்பர், எனது மொபைல் நம்பர் அல்ல என்றும் அதன் மூலம் மோசடி நடக்கிறது, யாரும் இந்த மோசடி வலையில் விழுந்து விட வேண்டாம், எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் ’நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, யாராவது என் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

குக் வித் கோமாளியில் 2 புதிய போட்டியாளர்கள்.. ஒருவர் பிரபல நடிகரின் பேரன், இன்னொருவர் கலை இயக்குனர்..!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த சீசன்கள் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில்

'பத்து தல' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும்

KDM டெலிவரி.. அமெரிக்காவில் இன்றே வெளியாகிறது 'பொன்னியின் செல்வன் 2'..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் சிறப்பு காட்சிகள் இன்று இரவே வெளியாக இருப்பதாக

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. என்ன காரணம் கூறினார் தெரியுமா?

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீ வா நண்பா, நாம் சேர்ந்து பயணிப்போம்.. விஷால் இயக்கத்தில் விஜய் படம்..!

 புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீசரை தளபதி விஜய் வெளியிட உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.