30 ஆண்டுகளா? என்னால் நம்பவே முடியவில்லை: குஷ்பு டுவிட்

நான் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கே பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’அண்ணாமலை’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதனை படக்குழுவினர் கொண்டாடினர்.

’அண்ணாமலை’ படம் வெளியாகி 30 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சுரேஷ்கிருஷ்ணா நேரில் சென்று சந்தித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அண்ணாமலை’ படத்தில் நாயகியாக நடித்த குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் 'அண்ணாமலை என்னுடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த படம் 30 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ரஜினிகாந்த் அவர்களுடன் பணிபுரிந்ததை மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். சுரேஷ்கிருஷ்ணா அவர்களுக்கும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'ராக்கெட்டரி' படத்திலும் போலீசாக நடித்த 'வலிமை' நடிகர்!

அஜித் நடித்த 'வலிமை' படத்தில் போலீசாக நடித்த நடிகர் ஒருவர், மாதவன் நடித்த 'ராக்கெட்டரி' திரைப்படத்திலும் போலீஸாக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 பாகங்களாக அடுத்தடுத்து உருவாக இருக்கும் சூப்பர்ஹிட் திகில் திரைப்படம்!

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தின் பல பாகங்கள் அடுத்தடுத்து வெளியானாலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை இரண்டு அல்லது மூன்று பாகங்கள் மட்டுமே அதிகபட்சமாக வெளியாகும்

மீண்டும் இணையும் 'தோழா' கூட்டணி!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் கார்த்தி இணைந்து 'தோழா'  என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி இணைந்துள்ள தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இசையமைக்கும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

விஜய்யின் 'வாரிசு' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் தமன் தனது சமூக