ரூ.90 லட்சம் மோசடி: போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

தன்னிடம் மேனேஜராக இருந்தவர் தனக்கு தெரியாமல் ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக நடிகை குட்டிபத்மினி இன்று போலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடிகை குட்டி பத்மினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கிரிக்கெட் ஃபவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறேன். விஷால் திறந்து வைத்த இந்த ஃபவுண்டேஷனில் திறமை இருந்தும் வசதி இல்லாத வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றுவதே எனது நோக்கமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த ஃபவுண்டேஷனை பொருப்பாக இருந்து கவனித்து வந்த எனது மேனேஜர் எனக்கு தெரியாமல் இன்னொரு கம்பெனி ஆரம்பித்து அந்த கம்பெனி பெயரில் பிக்புக் அடித்து வீரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். என்னுடைய நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக என்னிடம் கணக்கு காட்டியுள்ளார். இதுகுறித்து எனக்கு சமீபத்தில் தான் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கறிஞரின் உதவியுடன் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்துள்ளேன். போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நடிகை குட்டிபத்மினி கூறியுள்ளார்.