நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

தமிழ் சினிமாவின் புன்னகை அரசியான லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் ‘தில்’, ‘பிதாமகன்’ ’மௌனம் பேசியதே’ 'கம்பீரம்’ ’உள்ளம் கேட்குமே’ ’பரமசிவம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 12 வயதும், இளைய மகனுக்கு 9 வயது ஆகிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ படத்தில் நடித்து வரும் லைலா, அமேசான் ஓடிடிக்காக ‘வதந்தி’ என்ற தொடரில் நடிக்க உள்ளார். விக்ரம் வேதா’ இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி நிறுவனமான வால்வாட்சர் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரில் லைலாவுடன் எஸ்.ஜே.சூர்யா, நாசர், சஞ்சனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவ்வாக இருக்கும் சமீபத்தில் லைலா, விஜய் சேதுபதி எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’அவரை சந்தித்ததில் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? விரைவில் ஹீரோவாகி விடுவார்களோ? என கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால்.. நடிகர் ஜெயராம் பேட்டி!

எத்தனையோ பிரமாண்டமான படம் வரலாம், ஆனால் இதுமாதிரி ஒரு படம் இருக்காது என நடிகர் ஜெயராம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த உதயநிதி: என்ன சொன்னார் தெரியுமா?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் சிறப்புக் காட்சியை நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி பார்த்து உள்ளதாக

என்னை கேட்டால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என்று சொல்வேன்: பிரபல நடிகை

ஹிந்தி தான் தேசிய மொழி என சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறிய நிலையில் அதற்கு நடிகர் கிச்சா சுதீப் கொடுத்த பதிலடி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் மதுவின் செம கிளாமர் வீடியோ: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மது, கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்:  ரியோ மனைவி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

 திருமணத்திற்கு  சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ரியோவின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.