close
Choose your channels

லட்சுமி மேனன் இவ்வளவு ஸ்லிம்மாக மாறிவிட்டாரா?  லேட்டஸ் புகைப்படங்கள் வைரல்!

Tuesday, December 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை லட்சுமிமேனன் நடிக்க வந்த ஆரம்பத்திலிருந்து குண்டாக இருந்த நிலையில் தற்போது அவர் ஸ்லிம்மாக மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் நடிகைகள் சிலர் உடல் பருமனை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக குஷ்பு திடீரென ஸ்லிம்மாக மாறி ‘சின்னதம்பி’ குஷ்பு போல் மாறி உள்ளதை ஆச்சரியமாக அனைவரும் பார்த்தனர்.

அதேபோல் சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கும்கி’ ’வேதாளம்’ ’கொம்பன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் திடீரென தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கும்கி படத்தில் கொழுகொழு என பார்த்த லட்சுமி மேனனா இவர்? என அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் பார்த்து தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.