close
Choose your channels

பிறந்த நாளை கொண்டாடிய லட்சுமி ராயின் க்யூட் புகைப்படங்கள்!

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை லட்சுமிராய் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் கியூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட் திரையுலகில் நடித்து வருபவர் நடிகை லட்சுமிராய். இவர் ’கற்க கசடற’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி, அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ‘கேங்க்ஸ்டர் 21’ என்ற தமிழ் படம் உள்பட 4 படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லட்சுமிராய் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவுக்கு அவர் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்த நிலையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.