close
Choose your channels

'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக சென்னை வந்திறங்கிய பிரபல நடிகை: விறுவிறுப்பில் படப்பிடிப்பு!

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

லைகா நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் ஈசிஆர் சாலையில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரகுல் பிரீத் சிங் சென்னை வந்து இறங்கி இருப்பதாகவும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த வாரம் காஜல் அகர்வாலும் மும்பையில் இருந்து சென்னைக்கு ’இந்தியன் 2’ படப்பிடிப்பிற்காக வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்துகொள்ள உள்ளதால் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos