கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு தமிழ் நடிகைகள்!
நேற்று முதல் நாடு முழுவதும் அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உள்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்ட நிலையில் தற்போது திரையுலக பிரபலங்களும் இந்த தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
நடிகை வரலட்சுமியின் தாயார் மற்றும் ராதிகா உள்பட பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் தற்போது நடிகைகள் லதா மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை லதா என்பதும் அதேபோல் ரஜினி கமல் உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் லதா மற்றும் ஸ்ரீபிரியா இருவரும் இணைந்து ’நீயா’ என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர் என்பதும் இந்த திரைப்படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Let’s break the COVID chain pic.twitter.com/3rB6K4xxGV
— sripriya (@sripriya) March 1, 2021