close
Choose your channels

விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய நடிகை!

Thursday, June 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை', 'டிக் டிக் டிக்', 'ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு', 'தம்பிக்கு எந்த ஊரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மாதவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்திய திரையுலகில் கொடிகட்ட பறந்த மாதவி, திருமணம் ஆன பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதன்பின் நடிப்புக்கும் முழுக்கு போட்டுவிட்டார். தற்போது அவர் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ளார்.

இந்த நிலையில் மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த விமானத்தை இயக்க பைலட் ஒருவரை நியமனம் செய்திருந்த நிலையில் தற்போது மாதவியே விமானம் ஓட்ட பழகியதோடு, அதற்கான லைசென்ஸும் பெற்றுள்ளார். இனிமேல் அவரது விமானத்தை அவரே இயக்கி கொள்வார் என தெரிகிறது

அனேகமாக இந்திய நடிகைகளில் விமானம் ஓட்ட தெரிந்த நடிகை மாதவியாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது. தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.