close
Choose your channels

அஜித்தின் 'உல்லாசம்' நாயகி மகேஸ்வரியா இவர்? செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த மகேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ திரைப்படத்தை ஜெடி-ஜெர்ரி இயக்கியிருந்தனர் என்பதும் இவர்கள் சமீபத்தில் வெளியான ’தி லெஜண்ட்; என்ற திரைப்படத்தை இயக்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகி நடித்த மகேஸ்வரி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய உறவினர் ஆவார். ஏற்கனவே அஜித் நடித்த ’நேசம்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தமிழில் ’என்னுயிர் நீதானே’ ’மன்னவரு சின்னவரு’ உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மகேஸ்வரி, ஜெயகிருஷ்ணன் என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை மகேஸ்வரி சிறுவயதில் இருந்தே பேஷன் டிசைனிங்கில் அதிகம் ஆர்வம் உள்ளவர். மேலும் அவர் சினிமாத்துறையில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஆடைகளுக்கு பேஷன் செய்யும் தொழிலையும் செய்து வந்தார். அதுமட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருந்தவரை அவருக்கு ஆடைகளை டிசைன் செய்து கொடுத்தது மகேஸ்வரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.