மினி ஸ்கர்ட்டில் மாஸ்டர் மாளவிகா… ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட புகைப்படம்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வரும் மாளவிகா மோகனன் தற்போது மாலத்தீவில் இனிமையாகத் தனது விடுமுறை நாட்களைக் கழித்துவருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக உயர்ந்துள்ளார்.

அதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் பாலிவுட்டில் ஆக்ஷன் திரைப்படமான “யுத்ரா“விலும் அவர் கலக்கி வருகிறார். அதேபோல தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “ஹீரோ“ எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் கால்தடம் பதித்துவரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மினி வெள்ளை ஸ்கர்ட் அணிந்திருக்கும் நடிகை மாளவிகா மோகனின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு “வாவ்“ கமெண்ட்டுகளையும் லைக்ஸ்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

More News

காந்தி மாதிரி ஒரு மஹானா வாழ்வியா காந்தி மஹான்? விக்ரமின் 'மஹான்' டீசர்

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மஹான்' திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

புது வரலாற்றுச் சாதனை படைத்த ரஃபேல் நடால்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்

முதல் டாஸ்க்கில் இருந்தே வெளியேறிய வனிதா: ஆரம்பித்ததா சண்டை சச்சரவு?

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரம் கழித்துதான் சண்டை சச்சரவு தொடங்கும் என்ற நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை தொடங்கிவிட்டது பெரும் பரபரப்பை

என்ன ஆச்சு நதியாவுக்கு? கையில் வெட்டுக்காயத்துடன் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 80கள் மற்றும் 90களின் கனவு நாயகியாக இருந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நதியா என்பதும் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

எலான் மஸ்க்கையே அலறவிட்ட 19 வயது மாணவன்… என்ன செய்தார் தெரியுமா?

Space X மற்றும் டெஸ்லாவின் நிறுவனரும் அதன் செயல் தலைவருமான எலான் மஸ்கையே ஒரு டிவிட்டர் கணக்கை வைத்து