தலைகீழாக நின்று யோகா செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை!

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அவர் நடித்த இரண்டாவது படமும் அஜித் நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ’ரோஜாவனம்’ ’வெற்றி கொடி கட்டு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி ஒருசில மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் மாளவிகா நடித்துள்ளார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக மாளவிகா கூறியிருப்பதாவது: யோகாவின் மூலம் கடல், சூரியன், ஆச்சரியப்ப்டகூடிய காட்சிகள் மற்றும் மன அமைதியை கண்டறிய உதவுகின்றன. உண்மையிலேயே பிரமிப்பாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.