2வது கணவரையும் விவாகரத்து செய்த 'மன்மதன் அம்பு' நடிகை.. தொடர்ந்து நட்பில் இருப்போம் என அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,April 03 2024]

கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து விட்டதாகவும் இருப்பினும் அவருடன் தொடர்ந்து நட்பில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகா நடித்த ’சினேகிதியே’ கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளார் என்பதும், இவர் பிரபலம் மலையாள இயக்குனர் பிஎஸ் பிள்ளையின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மஞ்சு பிள்ளை, முகுந்தன் மேனன் என்பவரை முதலில் திருமணம் செய்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு சினிமா ஒளிப்பதிவாளர் ஆன சுஜித் வாசுதேவ் என்பவரை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி 24 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் பிரிய முடிவு செய்து இருக்கின்றனர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் பிரிந்துவிட்டதாகவும் இருப்பினும் சுஜித் வாசுதேவனுடன் நட்புடன் இருப்பேன் என்றும் மஞ்சு பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுஜித், கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ உட்பட சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்தார் என்பதும் இரண்டு படங்களை அவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

என்றென்றும் என் ஹீரோ இவர் ஒருவர் மட்டுமே: நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை நயன்தாரா 'எப்போதுமே தனது ஹீரோ இவர்தான்' என ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்ந்து உதவி செய்வதால் பாலா பர்சனல் வாழ்க்கையில் சிக்கலா? பயனளிக்காத பேச்சுவார்த்தை..!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து சமூக சேவை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த உதவிகளே அவருடைய பர்சனல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

'கோட்' படத்தில் நடிக்க முடியாது என கூறிய பிரபல நடிகர்.. வெங்கட்பிரபுவின் ரியாக்சன்..!

'கோட்' திரைப்படத்தில் நடிக்க முடியாது என பிரபல நடிகர் ஒருவர் கூறிய போது வெங்கட் பிரபுவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'பீஸ்ட்' நாயகிக்கு திருமணம்.. மாப்பிள்ளை 'மஞ்சும்மெல் பாய்ஸ்' பிரபலமா?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' படத்தில் நாயகிகளில் ஒருவரான நடித்த அபர்ணாதாஸ், மஞ்சும்மெல் பாய்ஸ் பிரபலத்தை திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் ஏப்ரல்

ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவதை விட இதுதான் பச்சை துரோகம்: விஜய்சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: