டர்பன் கெட்டப்பில் நடிகை மஞ்சுவாரியர்… கவனம் ஈர்த்த புகைப்படம்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்“ படத்தில் நடித்திருந்தார். மாரியம்மாள் கதாபாத்திரத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்த இவரது நடிப்பாற்றலைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் பிரமிப்பை வெளியிட்டு இருந்தனர்.

மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்துவரும் நடிகை மஞ்சுவாரியர் 40 வயதான பிறகும் பல இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மேலும் அவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “ஹவ் ஓல்ட் ஆர் யூ“ திரைப்படம் சூப்பட் ஹிட் அடித்தது. தமிழில் இந்தப் படம் “36 வயதினிலே“ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட்டிலும் நடிகை மஞ்சுவாரியர் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் “Gmeriki Pandit” எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் தான் வெளியே சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தலையில் டர்பன் அணிந்துகொண்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.