close
Choose your channels

மகளுடன் நடிகை மீனா, வைரலாகும் புதிய போட்டோஷூட்!

Friday, September 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனா தனது மகளுடன் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபல தமிழ் நடிகை மீனா கடந்த 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது தெரிந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நாயகியாக பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வந்த மீனா, தற்போதும் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பு மற்றும் ஒரு மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மீனாவின் மகள் நைனிகா, தளபதி விஜய் நடித்த ’தெறி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீனா மற்றும் நைனிகா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

’தெறி’ படத்தில் பார்த்த நைனிகாவா இவர்? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு தற்போது அவர் பெரிய பெண்ணாக இந்த போட்டோஷூட்டில் காணப்படுகிறார். விரைவில் தமிழ் திரையுலகிற்கு ஒரு நாயகி அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.