close
Choose your channels

நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டியில் குவிந்த பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்!

Friday, September 24, 2021 • தமிழ் Comments

நடிகை மீனா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன் நடித்த ’நெஞ்சங்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. அதன்பின்னர் ’அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின்னர் ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மீனா, கமல் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மீனா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளதாக தெரிகிறது. அதேபோல் ’திரிஷ்யம் 2’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz