தில்லானா தில்லானா.. மீனாவின் நள்ளிரவு பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யார் வந்துருக்காங்க பாருங்க..!

  • IndiaGlitz, [Saturday,September 16 2023]

நடிகை மீனா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு மீனாவின் பிறந்தநாள் பார்ட்டி நடந்த நிலையில் இந்த பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மீனா நடித்த படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது என்பதும், குறிப்பாக தில்லானா தில்லானா, மீனம்மா மீனம்மா போன்ற பாடல்களுக்கு மீனா உட்பட அனைவரும் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மீனாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், நடிகை அனிதா விஜயகுமார், நடிகை ப்ரீத்தி விஜயகுமார், நடிகை மாளவிகா, ரேணுகா பிரவீன், நடிகை மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சரியாக இரவு 12 மணிக்கு மீனா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.