மீனாவின் கணவர் உடல் தகனம் எங்கு? எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,June 29 2022]

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு திடீரென காலமான நிலையில் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

கடந்த 90 களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் நான்காவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிரமடைந்ததை அடுத்து வித்யாசாகர் உடல்நிலை மோசமானதாகவும்,  இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மீனாவின் கணவர் உயிரிழந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார் இதுகுறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் திரைப்பட நடிகையும் எனது குடும்ப நண்பருமான மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் இறந்தது கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்றும், வித்யாசாகரை இழந்து வேதனையில் ஆழ்ந்து இருக்கும் மீனா, நைனிகா  விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் தகனம் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

More News

நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா?

நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மஹா' திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்நிலையில் சிம்பு நடிக்கும் இன்னொரு திரைப்படமான 'வெந்து தணிந்தது காடு'

செல்வராகவனா இது? பயங்கர தோற்றத்தில் 'பகாசூரன்' ஃபர்ஸ்ட்லுக்!

 இயக்குநர் செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக 'சாணிக்காகிதம்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகப் பெரிய அளவில்

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

ரஜினி படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர்: இதுதான் காரணம்!

திரையுலகில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களும் ரஜினியுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்த