இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பிரச்சினை தலைவிரித்து ஆடி வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர் வட மாநிலங்களில் இந்த வெட்டுக்கிளியின் படையெடுப்பு இருந்ததை அடுத்து தற்போது தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் வந்துவிட்டதாகவும் ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இந்த வெட்டுக்கிளிகள் அட்டகாசம் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு பக்கம் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் நிலத்தை பாழடித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வெட்டிக்கிளிகளை பைகளில் பிடித்து அதை உணவுக்காக விற்பனை செய்துவரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகை மீரா சோப்ரா ’வெட்டுக்கிளிகளை உணவுக்காக விற்பனை செய்யும் வீடியோவை பார்த்தேன். இது உண்மைதானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னும் சாப்பிடுகிறார்களா? கொரோனாவிடம் இருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா? என்று ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா சோப்ரா தமிழில் எஸ்ஜே சூரியாவுடன் ‘அன்பே ஆருயிரே’ சிபிராஜின் ‘லீ’, போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரரிதான் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குடும்ப பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து கணவருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன்!

சமூக வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி, பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கின் பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில்

சர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்?

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த 'காட்மேன்' வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது

இயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை

கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன், தனுஷ் நடித்த 'மரியான்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி.

அமெரிக்கா, WHO வுடன் இருந்த தொடர்பை முறித்துக் கொண்டது!!! அதிரடி அறிவிப்பு வெளியட்ட அதிபர் ட்ரம்ப்!!!

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுவரை உலகச் சுகாதார அமைப்புடன் இருந்து வந்த தொடர்பை அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது என்பது தெரிந்ததே