செய்தி வாசிப்பாளர், நடிகை மீராவின் மகனா இவர்?

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், பாடகி மற்றும் நடிகை மீரா கிருஷ்ணன் மகன், சமீபத்தில் கமல்ஹாசன் படத்தின் பாடல் ஒன்றின் ரீமேக்கை அற்புதமாக வடிவமைத்துள்ளதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிம்லா ஸ்பெஷல் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ’உனக்கென்ன மேலே நின்றாய். எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ்பிபி குரலில் வாலி வரிகளில் உருவான இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் இந்த பாடலின் ரீமேக்கை ஒரு இசைக்குழு வெளியிட்டுள்ளது

இந்த பாடலை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதும், இந்த பாடல் இதயத்தை தொடும் வகையில் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பாடலை மிக அபாரமாக பாடி அந்த பாடலுக்கு அற்புதமான நடனத்தையும் ஆடியுள்ளார் ஆதித்யா. இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இவர் நடிகையும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான மீரா கிருஷ்ணனின் மகன் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவில் கமெண்ட்டில் தனது மகனை நினைத்து தான் பெருமைப்படுவதாக மீராகிருஷ்ணன் கமெண்ட் செய்துள்ளார்.
 

More News

நேரில் ஆஜராகும்படி நடிகை கங்கனாவிற்கு சம்மன்… என்ன காரணம்?

பிரபல ஹிந்தி பாடலாசிரியர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை

பாஜக பிரமுகருடன் சென்று எஸ்பிபி மனைவியை சந்தித்த நடிகை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருடைய வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியை பாஜக பிரமுகர் உடன்

தமிழக வீரர் நடராஜனிடம் பேசிய தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள்: வீடியோ வைரல்

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

அடையாளம் தெரியாத பிணத்தை 2 கி.மீ தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ… குவியும் பாராட்டு!

ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசுக்கு கொடுக்கப்பட்ட தகவலின்

அமைதியை தேடி கோவிலுக்கு சென்ற பிக்பாஸ் ஷிவானி: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இருந்தார்.