லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ’வால்மீகி’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’அய்யனார்’, ‘காதலுக்கு மரணம் இல்லை’ ’சூரிய நகரம்’ ’சண்டமாருதம்’ ’நேர்முகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவர் பல மலையாள படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகை விட்டு விலகிய அவர் துபாய் சென்றுவிட்டார். அங்கு அவர் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஸ்ரீஜா என்பவரை மீரா நந்தன் திருமணம் செய்ய இருக்கிறார். பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட இந்த திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீஜா - மீரா நந்தன் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீரா நந்தனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சோனியா அகர்வாலை மறக்காமல் டேக் செய்த செல்வராகவன்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை டேக் செய்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

'மார்க் ஆண்டனி' படம் பார்க்க சென்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான  'மார்க் ஆண்டனி' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்

செல்லத்துக்கு இந்த கேம் கூட புரியல.. மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஓவியா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ஓவியா. முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது

'இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்'.. நயன் அம்மாவை வாழ்த்தும் நெட்டிசன்..!

நடிகை நயன்தாராவின் அம்மா  தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவில்  'இப்படி ஒரு மருமகன் கிடைக்க

த்ரிஷா அடுத்த படத்தின் சிங்கிள்.. சித் ஸ்ரீராம் குரலில் உருக வைக்கும் பாடல்..!

த்ரிஷா நடித்த அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் சித் ஸ்ரீராம் உருக வைக்கும் அளவுக்கு பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது