close
Choose your channels

நடிகை மேக்னாராஜ் குழந்தையின் பெயர்சூட்டு விழா: வைரல் புகைப்படங்கள்!

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அர்ஜூனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை நடிகை மேக்னா ராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மேக்னாராஜ் கடந்த ஆண்டு கர்ப்பமான நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார். அவர் மறைந்தபோது மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதும் அதன் பின்னர் அவருக்கு குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வந்த மேக்னாராஜ் தற்போது குழந்தையின் பெயர் சூட்டு விழா குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் சூட்டி உள்ளதாகவும் ராயன் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தாயாக என் மகனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்து வருவதாக தெரிவித்த மேக்னாராஜ், ‘ராயன் எங்கள் இளவரசன் என்றும், நீ உன் தந்தையைப் போல் வளர்வாய் என்றும், அவரைப்போலவே மக்களை நேசிப்பாயா என்றும், உன்னை நாங்கள் எப்போது நேசிக்கிறோம் என்று பதிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு அனைவரையும் உருக வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.