கணவர், குழந்தையுடன் மியா ஜார்ஜ்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு ’அமரகாவியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். அதன் பின்னர் அவர் ’இன்று நேற்று நாளை’ ’வெற்றிவேல்’ ’எமன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ் கடந்த ஆண்டு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் அசத்தலான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மியாவின் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மியா ஜார்ஜ் தற்போது விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ மற்றும் ’இன்று நேற்று நாளை 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காங்கோவில் பரவும் புதிய கொள்ளை நோய்… எகிறும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் தற்போது பாக்டீரியாவால் ஏற்படும் “மெனுஞ்சைத்திஸ்”

நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் சதீஷின் குழந்தை செய்த காமெடி ஒன்றின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

டி20 இந்திய அணியில் அஸ்வின் தேர்வுக்கு இதுதான் காரணமா?

ஆஃப் ஸ்பின்னரான ரவிசந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர் தான் என்னுடைய திருமணம்: பிரபல நடிகர்

சிம்புவின் திருமணத்திற்கு பின்னர்தான் தனது திருமணம் என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்சேதுபதியை அடுத்து ஆர்யா: ஒரே நாளில் ரிலீஸாகும் இரண்டு படங்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாகவிருக்கும் நிலையில், ஆர்யா நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.