close
Choose your channels

இவர் தான் நடிகை நதியாவின் அம்மாவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Sunday, June 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பின் அவர் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை நதியா கடந்த 1988ஆம் அமெரிக்காவை சேர்ந்த ஷிரிஷ் என்பவரை திருமணம் செய்தபின் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் என்பதும் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை நதியா அவ்வப்போது தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை கூட அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நதியாவின் தாயாரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கருப்பு வெள்ளையில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நதியாவின் அம்மாவா? என ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.