ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார் நமீதா

  • IndiaGlitz, [Sunday,April 24 2016]
பிரபல நடிகை நமீதா, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் நேற்று முதல்வர் முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

நேற்று திருச்சியில் நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஈடுபட்டிருந்தபோது அதிமுகவில் இணைந்து கட்சியின் உறுப்பினர் அட்டையை முதல்வரிடம் இருந்து நமீதா பெற்றுக்கொண்டார்.
அதிமுகவில் நமீதா இணைந்துவிட்டதால் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் குஷ்பு மற்றும் நக்மா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அதிமுகவில் சார்பில் நமீதா களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விக்ரமின் 'இருமுகன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

'அரிமாநம்பி' ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை, மலேசியா படப்பிடிப்புகள் வெற்றிகரமாக...

சூர்யாவின் '24' சென்சார் தேதி குறித்த தகவல்

முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது...

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்

தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'தொடரி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

தனுஷ்-யுவன்சங்கர் ராஜா இணைந்த 'சொல்லித் தொலையேன்மா'

தனுஷ் நடிக்கும் ஒருசில படங்களுக்கு யுவன்ஷங்கர் இசையமைத்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒருமுறை தனுஷ் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலால் இணைந்துள்ளனர்...

61வது படத்திற்கு தயாராகிறார் இளையதளபதி விஜய்

இளையதளபதி விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் வெற்றி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...