close
Choose your channels

கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் நமீதா எடுத்த போட்டோஷூட்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அஜித்துடன் ‘பில்லா’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நமீதா சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் நடிகை நமீதா தற்போது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .

நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு நமீதா கர்ப்பமாகியதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.