7000 சதுர அடி.. சென்னையின் மையப்பகுதியில் நயன்தாரா தொடங்கிய புதிய தொழில்.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா சென்னை மையப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ள நிலையில், அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருகிறார். தற்போது கூட, அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒரு பக்கம் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் போது, மற்றொரு பக்கம் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அவர் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது, அடுத்த கட்டமாக அவர் ஸ்டுடியோஎன்ற ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளார். படப்பிடிப்புக்கு தேவையான முக்கிய அம்சங்கள் இந்த ஸ்டூடியோவில் இருப்பதாகவும், சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு பங்களாவையே அவர் ஸ்டுடியோவாக மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிகிதா ரெட்டி என்ற பிரபலம் உருவாக்கியுள்ள இந்த ஸ்டூடியோவில், ரசனை மிகுந்த உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கைவினைப் பொருட்கள், விசாலமான மாடி அறைகள், ஜொலிக்கும் வெளிச்ச ஏற்பாடுகளுடன் இந்த ஸ்டூடியோ வடிவமைக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் சிறப்பான நடத்த ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் நாட்களில் பல படங்களின் படப்பிடிப்பு இந்த ஸ்டுடியோவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Nayanthara and Vignesh Shivan’s studio in Chennai 😇 pic.twitter.com/TzVvhN2M8M
— Nayanthara✨ (@NayantharaU) March 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com