close
Choose your channels

சில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை

Tuesday, January 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டார்கள் என்றும் சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகும் எந்த பதிவுகளுக்கும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் பிரபல தமிழ் நடிகை ஒருவர் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதன்பின்னர் அட்லியின் ‘ராஜா ராணி’, தனுஷின் ’நய்யாண்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அதனை அடுத்து பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் விரைவில் அவர் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் மூடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை உறுதி செய்த நடிகை நஸ்ரியா சில ஜோக்கர்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார்கள் என்றும் அதனால் சில நாட்கள் என்னுடைய பதிவுகளுக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்களை அவர் ஜோக்குகள் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.