ஜிவி பிரகாஷ் பட நாயகி மருத்துவமனையில் அனுமதி! அறுவை சிகிச்சையா?

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நிகிஷா பட்டேல் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன் நான் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் என்னுடைய பாகத்தின் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத இனிமையான அனுபவங்கள். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

நடிகை நிகிஷா பட்டேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'99 சாங்ஸ்' ஹீரோவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு மற்றும் இசையில் உருவான '99 சாங்ஸ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது

3 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகிறதா? அதிமுக கொறடா பரிந்துரையால் பரபரப்பு

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததாகவும் டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோனது தெரிந்ததே.

நெருங்குகிறது ஃபனி புயல்: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபனி என்ற புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் ஏப்ரல் 30ம் தேதி தமிழகதின் வழியே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாஜகவில் இணைந்த 'பாகுபலி' பட கலைஞர்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.

காதலனை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம்