close
Choose your channels

கணவர் மீது புகார் கொடுத்த நடிகை: நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!

Tuesday, June 1, 2021 • தமிழ் Comments

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் நடித்து வரும் நடிகை ஒருவர் தனது கணவர் மீது புகார் கொடுத்ததை அடுத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நிஷா ராவல் மற்றும் நடிகர் கரண் மெஹ்ரா ஆகிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இருப்பதாக கூறப்பட்டு இருந்தாலும் இந்த தகவலை இருவருமே ஊடகங்களில் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென நடிகை நிஷா தனது கணவர் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் கரண் மெஹ்ராவை போலீஸார் கைது செய்தனர். இருவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென பிரச்சினை எழுந்ததாகவும், இந்த பிரச்சனையில் நிஷாவை கரண் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் நிஷாவின் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கரணை விரைவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz