close
Choose your channels

பீச் பேபியாக மாறி ஊசலில் ஆடும் ஓவியா.. லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ..!

Monday, May 12, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஓவியா பீச் பேபியாக மாறி ஊஞ்சலில் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ’களவாணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன் பின் சிவகார்த்திகேயனுடன் ’மெரினா’, சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’கலகலப்பு’, நவீன் இயக்கிய ’மூடர் கூடம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’ராஜபீமா’ மற்றும் ’சம்பவம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் விரைவில் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் பல படங்கள் நடித்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் தான் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு தான் முதல் முதலில் பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ஓவியாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் பேபியாக மாறி, கடற்கரை மணலில் டான்ஸ் ஆடும் காட்சிகள், ஊஞ்சலில் ஆடும் காட்சிகள் இருப்பதை எடுத்து இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment