டூப் இன்றி அந்தரத்தில் பறந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரபல நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு அந்தரத்தில் பறந்து டூப் இன்றி ஸ்டண்ட் காட்சியில் தைரியமாக நடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு சில ஆங்கில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்திற்கான ஒரு ஸ்டண்ட் காட்சியில் அந்தரத்தில் ரோப்பில் தொங்கிக்கொண்டு நடித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மிகவும் தைரியமாக டூப் இன்றி அந்தரத்தில் பறந்து செய்யும் ஸ்டண்ட் காட்சியில் நடிக்க பிரபல நடிகர்களே தயங்கி வரும் நிலையில் லட்சுமி மஞ்சு தைரியமாக இந்த காட்சியில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பா ரஞ்சித் - விக்ரமின் 'தங்கலான்' : சூப்பர் அப்டேட் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'தங்கலான்' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக

கடும் சோதனையில் பூத்த கனவு… பரதநாட்டியத்தில் கலக்கும் திருநங்கை பொன்னி!

கலை எல்லோருக்கும் சமமானது என்று சாதித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி

கை கொடுத்தது தப்பா? மைதானத்திலேயே மோதிக்கொண்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் காம்பீர்..!

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில்

'பொன்னியின் செல்வன் 2' வசூல் இத்தனை கோடியா? படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனம்

கால்களை இவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமா? பிரபல நடிகையின் வேற லெவல் வீடியோ..!

பிரபல பாலிவுட் நடிகை கால்களை தூக்கி கவர்ச்சியில் மூழ்கடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வளவு உயரமாக ஒருவர் கால்களை தூக்க முடியுமா என ஆச்சரியமாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.