close
Choose your channels

சத்குரு ஜக்கியுடன் கோல்ப் விளையாடும் சூர்யா-கார்த்தி பட நடிகை: வைரல் வீடியோ

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சத்குரு ஜக்கி உடன் வாஷிங்டனில் கோல்ப் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் கோல்ப் விளையாடும் காட்சிகள் உள்ளன. இவர்களுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.