கமல்ஹாசனை சந்தித்த பிரபல நடிகை-அரசியல்வாதி

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் பயணம் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரும் தனது சமூக வலைத்தளங்களில் ஆவேசமாகவும், தைரியமாகவும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஒரு தலைவனுக்குரிய அனைத்து அம்சங்களும் கமலுக்கு இருப்பதாக கருதி வரும் நிலையில் அவரை தினந்தோறும் பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக நல ஆர்வலர்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவரும், தற்போதைய மகளிர் காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசனின் டுவீட்டுக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் பிரபல நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் தற்போது நக்மாவும் அவரை சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களை வளர்க்கின்றது.

More News

விஜய்சேதுபதியின் முதல் பெரிய பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு

கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர் என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை தனது ரசிகர்களுக்கு அளித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே சுமார் பத்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது 'இதற்குத்தானா பாலகுமாரா' இயக்குனர் கோகுலுடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சினேகனிடம் ஆவேசமாக வாதாடிய நாடகக்காரி ஜூலி

இன்று காலை புரமோ வீடியோவில் ஜூலியை நாடகக்காரி என்று எந்த நேரத்தில் சுஜா கூறினாரோ, சமூக வலைத்தள பயனாளிகள் இன்று காலை முதல் ஜூலியை அந்த பெயர் சொல்லியே அழைத்து வருகின்றனர்...

ஒரு மணமகன் - இரு மணமகள் திருமணத்தில் திடீர் திருப்பம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் ஒரு மணமகன் - இரு மணமகள் குறித்த  திருமண பத்திரிகை வைரலாகி வந்தது அனைவரும் அறிந்ததே...

புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் தண்டனை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்களின் உயிர்கள் நாளுக்கு நாள் பலியாகி கொண்டே வரும் நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்...

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் மூலமே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கின்றது...