close
Choose your channels

நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் நடந்த திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த நிலையில் அவருடைய வீட்டில் நடந்த திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை பூஜா ஹெக்டேவின் சகோதரர் திருமணம் நேற்று நடந்தது. இந்த திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது

இந்த திருமணம் நிகழ்வு குறித்து அவர் கூறிய போது, 'என் அண்ணன் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். என்ன ஒரு அற்புதமான விழா, ஆனந்த கண்ணீருடன் இந்த திருமணத்தை பார்த்து நான் அழுதேன், ஒரு குழந்தையை போல் சிரித்தேன்'.

"அண்ணா உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடிகெடுத்து வைத்துள்ளீர்கள். நீங்கள் எங்களை மிகவும் நேசித்தது போல் உங்கள் மனைவியையும் நேசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். முழு மனதுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன். பிரமிக்கத்தக்க அழகுடன் உள்ள மணமகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.