close
Choose your channels

ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம்: அதிர்ச்சி தகவல்

Thursday, May 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற தமிழ் படத்தில் நடித்த நடிகை பூஜாஹெக்டே தற்போது தெலுங்கு இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாகவும், ஹிந்தியில் சல்மான்கான் ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் முடக்கி உள்ளதாகவும் அதனை தனது டிஜிட்டல் டீம் மீட்க போராடி வருவதாகவும் எனவே அதிலிருந்து வரும் எந்த அழைப்பையும் யாரும் ஏற்க வேண்டாம் என்றும் அந்தக் கணக்கில் இருந்து யாராவது தகவல் கேட்டால் அந்த தகவலை அனுப்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு ட்வீட்டை பதிவு செய்த பூஜா ஹெக்டே, கடந்து செல்ல சில மணி நேரங்களாக இருந்த பதட்டம் தற்போது முடிவுக்கு வந்ததாகவும் தனது டெக்னிக்கல் டீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டு கொடுத்து விட்டதாகவும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.