close
Choose your channels

'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் யார்? புதிய தகவல்

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் பிரபல பெங்காலி நடிகர் ஜிஷூ சென்குப்தா, சோபன்பாபு கேரக்டரிலும் நடித்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது சசிகலா கேரக்டரில் நடிப்பது யார்? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சசிகலா கேரக்டரில் பிரபல நடிகை பிரியாமணி நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் விலகியுள்ளதாகவும், இதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தில் இணைந்த நடிகை பூர்ணா, சசிகலா கேரக்டரில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் நடிகை மதுபாலா வருகிறார். இவர் ஏற்கனவே ’ரோஜா’ உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.