இப்போதைக்கு திருமணம் வேண்டாம்: அதிர்ச்சியில் இருந்து மீண்ட தமிழ் நடிகை பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பூர்ணா. இவரிடம் சமீபத்தில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் தாங்கள் துபாய் தொழிலதிபர் குடும்பத்தினர் என்று கூறி பூர்ணாவை பெண் கேட்டு பேசினர். அதன் பின்னர் அந்த கும்பல் போலியானவர்கள் என்றும், மிரட்டி பணம் பறிக்கும் கும்பம் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து பூர்ணாவின் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 10 பேர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இன்றும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் ’இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக நடிகை பூர்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இந்த நிலையில் துபாய் தொழிலதிபர்கள் என்று பெண் கேட்டு ஒரு கும்பல் வந்தனர். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினர்களும் சம்மதம் தெரிவித்தோம். மேலும் என்னை மணக்க இருந்தவருடன் நானும் அவரும் திருமணத்துக்குப் பிறகு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்து பேசினோம்.

இந்த நிலையில்தான் திடீரென்று எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து விட்டது. அவர்கள் முற்றிலும் போலி கும்பல் என்றும், அன்பாக பேசி எங்களை ஏமாற்றி உள்ளார்கள் என்றும் தெரிந்து உள்ளது. எனவே திருமணம் என்று நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. இப்போது திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தற்போது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று நடிகை பூர்ணா கூறியுள்ளார்.

More News

இந்திய மண்ணில் தரையிறங்கிய ரஃபேல் ரக விமானங்கள்!!! இதன் சிறப்பம்சம் என்னென்ன???

இந்தியா பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பான ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்டது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதால் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 6000க்கும் அதிகமாக இருந்தாலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட பாதிப்பு எண்ணிக்கையை

புவி அறிவியல் துறைக்கான தேசிய விருது: சென்னை தேசியப் பெருங்கடல் இயக்குநர் சாதனை!!!

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

யூடியூப் வீடியோக்களுக்கு சென்சாரா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வீடியோக்களை பதிவு செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலை மாறி தற்போது வருமானத்திற்காக யூடியூப் வீடியோக்களை

கொரோனா விவகாரத்திலும் அதிரடி காட்டும் ரூபா ஐபிஎஸ்!!!

கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை டிஐஜி யாக இருந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும்