close
Choose your channels

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் செம்ம போஸ்.. ப்ரியா ஆனந்த் வைரல் வீடியோ..!

Wednesday, May 7, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சல் உடையில் செம போஸ் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வாமனன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பின்னர், அவர் ‘இரும்பு குதிரை’, ‘முத்துராமலிங்கம்’, ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘எல்கேஜி’, ‘காசேதான் கடவுளடா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’சுமோ’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ள பிரியா ஆனந்த், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, பிகினி அணிந்து, நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான கமெண்ட்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment