close
Choose your channels

'தளபதி 63' நாயகி நானா? பிரபல நடிகையின் டுவீட்

Friday, November 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து, இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகி அல்லது நாயகிகள் யார்? என்பது குறித்த சஸ்பென்ஸ் மட்டும் இன்னும் வெளிவரவில்லை

சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால் என இந்த படத்தின் நாயகி பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம்' நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவீட்டின் கமெண்டில் நடிகை ராஷ்மிகா, 'டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகவுள்ள இந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.