close
Choose your channels

மாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்!

Tuesday, January 19, 2021 • தமிழ் Comments

பெரியதிரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ஒருவர் தனது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம்இருவர் நமக்குஇருவர், நாச்சியாபுரம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரச்சிதா. இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை சந்திக்க மாற்றுத்திறனாளி ரசிகர் கார்த்திக் என்பவர் விருப்பம் தெரிவித்ததை அறிந்தவுடன் அந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரென அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நடிகை ரச்சிதாவை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ரசிகர் கார்த்திக்கிற்கு அவர் இனிப்பு வழங்கி மகிழ்வித்தார். மேலும் அவரது பக்கத்தில் ரச்சிதா உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்த வீடியோ காட்சிகள் தற்போது அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை ரச்சிதாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz