நடிகை ராதா மகளுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அவர் பதிவு செய்த புகைப்படத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அவர் தனது வருங்கால கணவர் யார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

படுக்கையறை காட்சிகளுடன் பாலாஜி முருகதாஸின் 'ஃபயர்'.. கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸ் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றும்

'லியோ' ரிலீஸ் ஆயிருச்சு.. நாம ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்: அர்ச்சனா கல்பாதி ட்விட்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி பெரும்பாலான ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. நிச்சயம் இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெறும்

கண்ணாடியை உடைத்து ஒரே களேபரம்.. பிக்பாஸ் டாஸ்க்கில் விபரீதம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  இன்று போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்கின் போது கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லியோ' முதல் காட்சியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படம் திரையிட்ட தியேட்டரில் காதல் ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில்

இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் சாப்பிடலாம்.. வங்கதேச வீரர்களுக்கு பிரபல நடிகையின் அறிவிப்பு..!

இன்று நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வங்கதேச அணி தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் என்னுடன் அமர்ந்து