நீச்சலுடை காஸ்ட்யூம்.. கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு பாராட்டு தெரிவித்த நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

நீச்சலுடைய காஸ்ட்யூம்களை சிறப்பாக வடிவமைத்து கொடுத்த காஸ்டியூம் டிசைனரான கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதிக்கு பாராட்டு தெரிவித்து நடிகை ராதா தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

கமலஹாசன், ராதா, மாதவி, ஸ்வப்னா நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’டிக் டிக் டிக்’. இந்த படம் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகிகளான ராதா, மாதவி மற்றும் ஸ்வப்னா ஆகிய மூவரும் அந்த காலத்திலேயே நீச்சல் உடையில் தோன்றுவார்கள் என்பதும் அப்போது அது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன், மாதவி மற்றும் ஸ்வப்னா உடன் இருக்கும் நீச்சல் உடை புகைப்படத்தை பதிவு செய்துள்ள ராதா, தனது மலரும் நினைவுகளை குறிப்பிட்டுள்ளார்.. ’டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. நீச்சல் உடைய அணிவது அப்போது வேலையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்போது சந்தித்த போராட்டங்கள் அதை வலிமையால் சமாளித்த விதத்தை பார்த்து எங்களை நாங்கள் பாராட்டி கொள்கிறோம். குறிப்பாக மாதவிக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.

சில நினைவுகள் இப்போது திடீரென வந்ததால் அதை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக எங்கள் ஆடை வடிவமைப்பாளர் வாணி கணபதியின் அழகான ஆடை வடிவமைப்பிற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

More News

தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சிம்ரனின் இரண்டாவது மகனா இவர்? புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறிபார்த்து அடித்த நதியா: படப்பிடிப்பின் இடையே எடுத்த வீடியோ வைரல்..!

நடிகை நதியா வில்லிலிருந்து குறி பார்த்து அம்பை விட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .

44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'வலி தெரியாம இருக்க, அதைவிட பெரிய வலியை கொடுக்கணும்: 'ஆகஸ்ட் 16 1947' டிரைலர்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில், பொன் குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'ஆகஸ்ட் 16 1947'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து